தமிழக அரசு வருடம் தோறும் மாவட்டத்திற்கு ஒரு நபருக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழ்ச்செம்மல் விருதை செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை பல்வேறு அமைப்பினரும் கௌரவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கருங்குளம் வட்டார மருத்துவ அலுவலர்கள் கொண்ட குழுவினர் செய்துங்கநல்லூருக்கு வருகை தந்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் இளங்கோ ராஜன், கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சண்முகப்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


