திருச்செந்தூருக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்.
திருச்செந்தூர் இரண்டாம் படை வீடு என்றழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்த பக்தர்கள் நடைபயணமாக திருச்செந்தூர் வந்து செல்கிறார்கள். ஒரு காலத்தில் கந்த கஷ்டி மற்றும் வைகாசி விசாகத்தில் மட்டுமே திருச்செந்தூருக்கு மிக அதிகமான பகதர்கள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராஜபாளையம், அம்பாசமுத்திரம் தென்காசி உள்பட பல பகுதியில் இருந்து பக்தர்கள் வருவார்கள். அவர்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்துவார்கள். ஆனால் தற்போது தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை , மாசி திருவிழா உள்பட முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் நடைபயணமாக சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்பட பல்வேறு வகையான காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் கருங்குளம் பகுதியில் பறவை காவடி எடுத்து வந்த பக்தரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன் கோயில் இருந்து வந்த பக்தர்களின் பக்தி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது


