செய்துங்கநல்லூரில் பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு சாலை விபத்தை தடுக்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர். எஸ்.பி ஜெயக்குமார் ஒட்டினார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடி வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பக்தர்களுக்கு சாலைகளில் செல்லும் போது பாதுகாப்பாக செல்வது குறித்து விளக்கமளித்தார். அதன்பின்னர் அவர் பக்தர்களின் கைகள் மற்றும் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கரை ஒட்டினார். மேலும் கையில் கொண்டு செல்ல பயன்படும் கம்புகளிலும் ஒளிரும் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு மோர், காபி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் உள்பட போலிசார் கலந்து கொண்டனர்


