தூய்மை பணியாளர்கள் சம்பளத்தினை 5 ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கருங்குளம் ஒன்றிய தூய்மைப் பணியாளர்கள் கூட்டம் செய்துங்கநல்லூரில் நடந்தது. ஒன்றிய தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் பெருமாள், பொருளாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சக்தி வேல் சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் சம்பளத்தினை 5 ந்தேதிக்குள் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிக்கைகான முன்பணம் ரூ5 ஆயிரத்தினை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற வி.கோவில்பத்து அம்மாச்சிக்கு ரூ 50 ஆயிரம் பணப்பலனும், அவருக்கு மாதம் 2 ஆயிரம் மாத ஓய்வுதியமும் வழங்கவேண்டும் என்பது உள்பட 5 கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் ரமேஷ், துணைச்செயலாளர் பொன்னுச்சாமி, தூய்மை காவலர்கள் பத்மினி, செயலாளர் சுமதி பொருளாளர் முருகலெட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன் பின் கோரிக்கை மனுவை கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மாநில தலைவர் சக்தி வேல் வழங்கினார்.


