செய்துங்கநல்லூர் அருகே அய்யனார்குளம் பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் சுடலை மணி. இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் முத்துபெருமாள்(16). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். கொரோனா நோய் காரணமாக இவர் ஆன்லைனில் வீட்டில் இருந்தே படித்து வருகிறார். அதற்காக போன் வேண்டும் என்று வீட்டில் கேட்டுள்ளார். ஆனால் ஏழ்மை காரணமாக போன் வாங்கி தர தாமதமாகி விட்டது. இதனால் வருத்தமடைந்த முத்துபெருமாள் நேற்று முன்தினம் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு, அவரை கயிற்றில் இருந்து இறக்கி பாளை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.