ஸ்ரீவைகுண்டம் அருகே
தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கையோடு இணைந்து ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் பனை விதை நடும் விழா நடத்தினார். இதை பொதுமக்கள் பாராட்டினர்.
ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தாமிரபரணி ஆற்றங்கரையில் கடந்த அக்டோபர் மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அப்போது நீர்கருவை மரங்களை அகற்றி அதில் மரங்கள் நடும் பணியை அவர் துவக்கி வைத்தார். அந்த பணியை சமூக சேவகராக இருந்த ஆறாம்பண்ணையை சேர்ந்த சேக் அப்துல்காதர் பாதுகாத்து வந்தார். இதற்கிடையில் ஜனவரி மாதம் பஞ்யாத்து தலைவராக சேக் அப்துல் காதர் பதவியேற்றார். அதன் பின் அவர் ஆறாம்பண்ணை பஞ்சாயத்து உள்பட்ட இடங்களில் வேம்பு, புங்கை, நாவல் உள்பட மரங்களை நட்டு பஞ்சாயத்து மூலம் பாதுகாத்து வருகிறார்.
இதற்கிடையில் 1000 பனை விதைகளை ஆறாம்பண்ணை ஆற்றங்கரையில் நட அவர் திட்டமிட்டார். அதன் படி அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கான மரம் நடும் விழா தாமிரபரணி ஆற்றங்கரையில் வைத்து நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கோமதி ராஜேந்திரன் ஆகியோர் மரக்கன்று நட்டு சிறப்புரையாற்றினர். அதன் பின் பனை விதை நடும் விழாவை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தெய்வசெயல்புரம் வருவாய் ஆய்வாளர் வெள்ளத்தாய், ஆறாம்பண்ணை கிராம நிர்வாக அதிகாரி கமல் ராஜ், நம்தாமிரபரணி நல்ல பெருமாள், வித்யாசாகர், முத்துகிருஷ்ணன், சிகாமணி, ஜமாத் செயலாளர் மொன்னா முகம்மது, பஞ்சாத்து உபதலைவர் அப்துல் கனி, பஞ்சாயத்து எழுத்தர் ஹரிஹரசுந்தரம் , பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஜமாத் நிர்வாகிகள் , மக்கள் நலச் சங்கத்தினர் கலந்துகொண்டனர். சையத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆறாம்பண்ணை பஞ்சாயத்து நிர்வாகம் செய்திருந்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் ஆறாம்பண்ணை தாமிரபரணி ஆற்றுக்கு வரும் சாலையை மேம்படுத்தி தருவதாக வாக்களித்தார்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கையோடு இணைந்து பனை விதை நடும் விழா நடத்திய பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதரை பொதுமக்கள் பாராட்டினர்.


