14 லட்சம் மதிப்பிலான புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டுவிழா வசவப்பபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில் தெருவில் நடந்தது.
வசவப்பபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் சாந்திலெட்சுமி சுடலைக்கண்ணு தலைமை வகித்தார். கருஙகுளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி திட்ட இயக்குநர் தனபதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் சித்திரை சேகர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் சிவகுமார், சுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் கந்தசாமி உள்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து வசவப்பபுரம் அருகே உள்ள மருதூர் மேலக்காலில் 8.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பணியை தூத்துக்குடி திட்ட இயக்குநர் தனபதி பார்வையிட்டார். மேலும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
படம் உள்ளது.


