பாபர் மசூதி இடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை கண்டித்து செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாபர் மசூதி இடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை கண்டித்து செய்துங்கநல்லூர் பள்ளிவாசலுக்கு முன்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாபர் பாப்புலர் ப்ரண்ட் யூனிட் தலைவர் அபு ஹ§பைஸ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிளை செயலாளர் நவாஸ் சிஎப்எல் மாநில நிர்வாகி கஸ்ஸாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ப்ரண்ட் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்துல்காதர் கண்டித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை எதிர்த்தும், அத்வானி உள்பட வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்த அனைவரையும் கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். செய்துங்கநல்லூர் முஸ்லீம் ஜமாத்தை சேர்ந்தவர்கள்,கட்சி நிர்வாகிகள் உள்பட ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
படம் உள்ளது.