வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் சித்தர் பீடத்தில் தினமும் 38 கிராமத்தினை சேர்ந்த 1500 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வள்ளலாரின் வழிதோன்றல் என்றழைக்கப்படுபவர் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள். இவர் அடக்கமான இடம் வல்லநாடு அருகே பாறைக்காடு என்ற இடத்தில் உள்ளது. இங்கு சுவாமி 40 வருடங்களுக்கு முன்பு அடக்கமான இடத்தில் எரியும் தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. அதுபோலவே இங்கு தினமும் 40 வருட காலமாக அன்னதானம் தொண்டர் குலம் சார்பில் நடந்து வருகிறது. இதற்கிடையில் கோரோனா நோய் தீவிரம் காரணாமாக ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. இதனால் முறப்பநாடு போலிஸ் சரகத்துக்கு உள்பட்ட 38 கிராமங்களை சேர்ந்து 1500 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனால் வல்லநாடு சித்தர் பீட பணியாளர்கள் மற்றம் 60 தன்னார்வ தொண்டர்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட முறையில் உணவு தயாரிக்கப்பட்டு, அந்த உணவை பாதுகாப்பாக பார்சல் செய்து, வாகனங்கள் மூலமாக அந்தந்த கிராமத்துக்கு கொண்டு சென்றனர். இந்த பணியில் சாதி மத ஏற்பாடு இன்றி அனைத்து இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சித்தர் பீட பொறுப்பானர் சந்தானம் அவர்கள் கூறும்போது, முறப்பநாடு காவல்துறை ஆய்வாளர் பார்த்தீபன் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் ஆதரவற்ற 1500 பேர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தினமும் மதியம் தோறும் அன்னதானம் வழங்கி வருகிறோம். இதில் 60 க்கு மேற்ப்பட்ட தன்னார்வ தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கும் பணியை தொய்வின்றி நடத்தி வருகிறார்கள். நாடு இயல்பு நிலைக்கு வரும் வரை நாங்கள் அன்னதானம் வழங்கிக்கொண்டிருப்போம் என்று கூறினார் . அவருடன் ஜெகநாதன், பிள்ளை முத்து, ஒன்றிய கவுன்சிலர் முத்துராமலிங்கம் உள்பட பலர் இருந்தனர்.
ஏழை எளிய மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு வழங்கும் ஏற்பாட்டை முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையில் பசுமை தமிழ் தலை முறை மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


