நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகில் உள்ள கடம்பன் கும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. நெல்லை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பி.டி.சுந்தரம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு கல்விப்புரவலர் மூ. ஊசிக்காட்டான் , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வே. நடராஜன் வரவேற்றார். ஆசிரியை கலைச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முதன்மைக் கல்வி அலுவலகம் நேர் முக உதவியாளர் இராமசுப்பு, திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் முருகன், எல்.ஐ.சி. பௌத்த ஊழியர்கள் மற்றும் ஆதிகாரிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் சுவாமி நாதன், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் செந்தில்குமார் தளபதி சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தனசிங் ஐசக் மோசஸ், கிழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் கஜேந்திரபாபு, காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி, கடம்பன் குளம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு. சுந்தரம் , உதவி தலைமை ஆசிரியர் ரவி, வழக்கறிஞர் ரவி, தமிழாசிரியர் முத்துகுமார், விளையாட்டு ஆசிரியர் செந்தில், பேச்சிப்பாறை ஆசிரியர் சந்திரசோமு, ஆசிரியை பெரியநாயகி, மாலினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உடற் கல்வி ஆசிரியர் ஆறுமுகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் முனீஸ்வரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் , ஆசிரிய ஆசிரியைகள் , மாணவ மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் , முன்னாள் மாணவர்கள், அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி செய்திருந்தது.


