நாகர்கோயில் கோட்டாறு ராஜகோகிலா தமிழ் அரங்கத்தில் உலகத் தாய்மொழி தின விழா நடந்தது. தென்குமரி தமிழ்ச்சங்க தலைவர் வழக்கறிஞர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் பத்மநாபன், பிரம்மஞான சபை தலைவர் ஆபத்துகாத்த பிள்ளை, சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் காமராஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ராஜம்சந்திர ஹாசன், ஜான்சிராணி விஜயராஜா, ராதா ராஜேந்திரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். ரெங்க பாய் சதாசிவம், சௌதாமினிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் இறைவணக்கம் பாடினர். தென்குமரி தமிழ்ச் சங்க செயலர் பா.அனுசியா செல்வி வரவேற்றார். அறிஞர் அண்ணா கல்லூரி மேனாள் முதல்வர் பத்மநாபன், கன்னியாகுமரி மாவட்ட பன்னாட்டு தமிழுறவு மன்றம் தியாகி கோ. முத்துகருப்பன், செந்தமிழ் அருள்நெறிப்பேரவை தலைவர் வே. இராமசாமி, மருங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிஷோர், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி உதவி பேராசிரியர் அருணா, எழுத்தாளர் உமாகண்ணன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விழா பேரூரை நிகழ்த்தினார். ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் போது தமிழ் மூத்த மொழி என புலப்படும் என அவர் பேசினார். அவரை ஓவியமாக வரைந்து மேடையில் நினைவு பரிசாக ஓவியர் கோபால் வழங்கினார். நிகழ்ச்சியை இனியன் தம்பி தொகுத்து வழங்கினார். சிவந்தி ஆதித்தனார் கல்லூரி உதவி பேராசிரியர் நாராயணன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ராஜகோகிலா அறக்கட்டளையின் தென் குமரி தமிழ்ச்சங்கம் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.


