
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தாமிரபரணி பறவைகள் திருவிழா 2020 நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக நீர் நிலைகளை மறுசீரமைத்தல் பயிற்சி பட்டறை நடந்து வருகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சுந்தரனார்அரங்கத்தில் நடந்த பயிற்சி பட்டறையை துணை வேந்தர் பிச்சுமணி துவக்கி வைத்தார். சாகித்திய அகாதெமி விருதளார் சோ.தர்மன் சிறப்புரையாற்றினார். கருத்தாளர்களாக பெங்களுரூ கணேஷ், பிரியதர்ஷனன் தர்மராஜன், சென்னை கிறித்துவம்கல்லூரி டி.நரசிம்மன், பெங்களுரூ இயற்கை பாதுகாப்புக் கழக்ம கே.எஸ்.கோபிசந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தவாரவியல் துறை தலைவர் ரவிச்சந்திரன், முரளிதரன், நெல்லை முத்தமிழ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சென்னை அருண் கிருஷ்ண முருத்தி, நம்தாமிரபரணி ரவிவெங்கடேஷ், நாமக்கல் அருள்சேகர், திண்டுக்களல் பசுமை செந்துறை அரசுக் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை மு. மதிவாணன், முனைவர்கள் ரவிசந்திரன், சாமுவேல் ஆசிர்ராஜ், முரளி தரன் தலைமையில் மனோன்மணியம் பல்கலைகழகம் மற்றும் அகத்தியர் மலை மக்கள் சார் இயற்கை வள காப்ப மையம் செய்திருந்தது.