தூத்துக்குடியில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பக்தி சொற்பொழிவு, பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நவராத்திரி திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கி 2ம் தேதி சூரசம்ஹாரம் நடந்தது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் சிவன் கோவில் முன்பு இன்று மாலை சப்பரங்கள் பேரணி நடக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு தமிழ் ஆசிரியை மாரியம்மாள் பக்தி சொறிப்பொழிவு நடந்தது. அதைத் தொடர்ந்து எஸ்எம்எஸ் இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மாணவிகள் அமிர்த வர்ஷினி. சிவரஞ்சனி. ஆகியோரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது காமராஜ் கல்லூரி செயலாளர் பி.எஸ்.பி.கே.ஜே. சோமசுந்தரம் தலைமை வகித்தார். சப்பர பேரணி ஒருங்கிணைப்பாளர் மாயக்கூத்தன் முன்னிலை வகித்தார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழா நடைபெற்றது.

சிவன் கோவில் தலைமை பட்டர் செல்வம், சப்பரபேரணி கமிட்டி தலைவர் தனபாலன் செயலாளர் வன்னியராஜ் பொருளாளர் ஆதிநாத ஆழ்வார் அமைப்பாளர் சிவகுமார் துணைத்தலைவர்கள் ராகவேந்திரா குருமூர்த்தி காளிராஜா துணை பொருளாளர் சரவணகுமார் கமிட்டி உறுப்பினர்கள் சிவலிங்கம். பலவேசம், வினோத், மாரியப்பன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சுதா, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்


