தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி தொடர்ந்து ஆற்றின் கரையோரங்களில் மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கப்படவுள்ளது.
இதன்படி ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீவை தாமிரபரணி ஆற்றின் கரைகளில் மரம் நடும் விழா கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. சமூக ஆர்வலர் சித்திரைவேல், அன்னை தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு மக்கள் இயக்க தலைவர் சாமிநாதன், செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வணிகர் சங்க தலைவர் பெரியசாமி, வட்டார பயணிகள் நலச்சங்க தலைவர் அரசன்துரைசாமி ஆகியோர் மரங்களை நட்டு பணியை தொடங்கி வைத்தனர்.
இதில், ஆழ்வார்திருநகரி டவுன். பஞ்சாயத்து உதவியாளர் சுப்பிரமணியன், தன்னார்வதொண்டர்கள் செல்வன்துரை, கண்ணன், ஆனந்தசெல்வன், ஜெயராம், விஜயகுமார், முத்துசெல்வன், வினோத், பொதுமக்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


