
ஸ்ரீவைகுண்டம் போக்குவரத்து பணிமனை முன்பு மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் தவறான கொள்கையின் முடிவான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் தேசிய பணமாக்கல் திட்டம் என்ற நிதி அமைச்சரின் அறிவிப்பைக்கண்டித்தும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்ய கோரியும் ஸ்ரீவைகுண்டம் பணிமனை இன்று அதிகாலை 4:30 மணி முதல் 6 மணி வரை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.