சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது.
முகாமினை கல்லூரி முதல்வர் முனைவர் சின்னத்தாய் தொடங்கி வைத்தார். 31.08.2021 முதல் 03.09.2021 வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
தடுப்பூசி முகாமில் பேராசிரியர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமிற்கு முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விக்னேஷ், கிராம சுகாதார செவிலியர் கிரிட்டா, ஜோதி மணி சுகாதார ஆய்வாளர் ஜெயபால், மருந்தாளர் கோமதி, சுகாதார தன்னார்வலர்கள் அமல புஷ்பம், சரஸ்வதி ஆகியோர் தடுப்பூசி முகாமை திறம்படச் செயல்படுத்தினர். முகாமின் ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தினரும், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து சிறப்பாக நடத்தினர்.


