கிளாக்குளத்தில் தீயணைப்பு படையில் பணிபுரியும் அருள் லிங்கப்பெருமாள்- சத்திய வடிவு புதுமண தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்புக்கு வந்தவர்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் சிவலிங்கப்பெருமாள். இவர் சென்னையில் தீயணைப்புத் துறையில் தீயணைப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சத்யவடிவு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
அதன் பின்னர் அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி கிளாக்குளத்தில் உள்ள மணமகன் இல்லத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மரங்கள் வளர்ப்பது மற்றும் மழை பெறுவது குறித்து விழிப்புணர்வுக்காக மா, பலா, தேக்கு, கோங்கு போன்ற 10க்கும் மேற்பட்ட 500 மரக்கன்றுகளை அருள் லிங்கப்பெருமாள்- சத்திய வடிவு புதுமண தம்பதியினர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் துவக்கி வைத்தார்.


