வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் நடந்தது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயான கொரானா வைரஸ் தொற்றியிருந்து இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கிருஷ்ண லீலா அறிவுறுத்தலின்படி காய்ச்சல் கண்டறியும் முகாம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. கருங்குளம் வட்டாரம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகின்றன. மேலும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வி வழிகாட்டுதலின்படி அனைத்து முகாம்களிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் மருத்துவ அலுவலர் பிலிப், சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முகாம்களில் காய்ச்சல் பரிசோதனை, கபசுர குடிநீர் வழங்குதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆகியன நடைபெற்று வருகிறது. மேலும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி சுகாதார ஆய்வாளர் ஷாகிர்கான், மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு கொரனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்