ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி தூத்துக்குடி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் கண்ணன் (36). கொத்தனார் இவருக்கு திருமணமாகி முருகலட்சுமி என்ற மனைவியும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கண்ணன் தனது குடும்பத்துடன் ஆழ்வார்திருநகரி அருகே காடுவெட்டி கிராமத்தில் நடந்த கோவில் கொடை விழாவிற்காக சென்றிருந்தார். அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு தாமிரபரணி ஆற்றில் குளிக்கசென்றார்.
நீச்சல் தெரியாத அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஏரல் தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


