விளாத்திகுளத்தில் வடமாநில இளைஞரிடம் செல்போன் பறித்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (23), இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுப்பிரமணியபுரத்தில் தங்கி, பஜார் பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 25 ம் தேதி இரவு 11 மணி அளவில் செல்போனை கையில் வைத்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4பேர் ஆகாஷின் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விளாத்திகுளம் – சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சோமு மகன் அருண்குமார் (22), சாலையம் வரதராஜ் மகன் மாடசாமி (24), மீரான்பாளையம் தெருவை சேர்ந்த முருகன் மகன் முத்துசெல்வம் (20), சுப்பிரமணியபுரம் ஜெயப்பெருமாள் மகன் முத்தீஸ்வரன் (27) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் முத்தீஸ்வரன் மீது ஏற்கனவே விளாத்திகளும் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


