தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்பட எவ்விதத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகம் மற்றும் புதிய பேராயர் தேர்தல் தொடர்பான வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்பட எவ்விதத் தடையும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்திற்கான புதிய பேராயர் தேர்தலை நடத்துவதற்கும் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. பேராயர் தேர்தலை நடத்துவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதன் மூலம் திருச்சபையின் தினசரி நிர்வாகப் பணிகள் எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு, தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தைச் சேர்ந்த திருச்சபை உறுப்பினர்களிடையேயும், கிறிஸ்தவ மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


