தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தென் மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கி வருகிறது. தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு ஏப்.10 முதல் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்கம் வாங்கிய அனைவருக்கும் ரூ.500 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு மோர், தயிர்சாதம், கேசரி போன்றவையும் வழங்கப்பட்டன

அட்சய திருதியை முன்னிட்டு, பட்டுசேலை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சின்னத்துரை அன்கோ ஜவுளி நிறுவனத்தின் பட்டுச் சேலை பிரிவிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.


