விருதுகள் என்பது உயிரற்ற பொருள் அல்ல அவை சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்படும் போது அது உயிருள்ள பொருளாக மாறி கொடுத்தவர்களுக்கு நிறைவும் பெற்றவர்களுக்கு இன்னும் இன்னும் உழைக்க உயர உந்து சக்தியாக இருக்கும் ஒரு உற்ற நண்பன்.
விருது கொடுப்பதற்கு பணம், பொருள், மிகப்பெரிய அமைப்பு என்கிற பின்னணி, பிரபலங்களின் வருகை, பிரம்மாண்ட மேடை என எதுவும் தேவையில்லை. உளமார பாராட்ட வேண்டும் என்ற ஆர்வமுள்ள மனங்களும் அதை ஏற்றுக்கொள்ள கூடிய அன்பு மனமும் போதும்.
எங்கள் NPNK – நல்லதைப் பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம் பதிவு எண் 0877/2021 , 2015 இல் தொடங்கினாலும் பல்வேறு பணிகளுக்கு இடையே சென்ற வருடம் முதல் தொடர்ந்து நடத்தும் 3 வது தே விருது விழா. வழக்கம் போல் இந்த முறையும் எங்கள் குழு நண்பர்களே ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டு உடல் உழைப்பு, பொருள், என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு செய்து முடித்தோம்.
நேற்று நடந்து முடிந்த இந்த விழாவில் தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்க முடியவில்லை எங்கள் இணைய அழைப்பையே இதய அழைப்பாக ஏற்றுக் கொண்டு நேரில் வருகை தந்து வாழ்த்திய 200 க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள். வெற்று புகழ்ச்சி மட்டும் சொல்லாமல் ஆத்மார்த்தமான பாராட்டுகளோடு குறை நிறைகளை எடுத்துச் சொல்லி வாழ்த்தி சென்ற ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.
இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய நெல்லை மாவட்ட ஆட்சியர் உயர்திரு. வே விஷ்ணு அவர்கள் தொடங்கி எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், முத்தாலங்குறிச்சி காமராசு சார், கவிஞர். முனைவர் கணபதி சார், என வந்து வாழ்த்திய சிறப்பு விருந்தினர்களுக்கு பெரும் நன்றிகள்…
இணையத்தில் நேரலையில் பார்த்து ரசித்த அனைவருக்கும் நன்றி நன்றி 2021 இல் NPNK செய்த 100 கணக்கான சமூக பணிகள் 2022 இல் இன்னும் பல மடங்காக அதிகரிக்கும். வரும் காலத்தில் NPNK என்ற இந்த அமைப்பு உலக அளவில் நெல்லைக்கு பெருமை சேர்க்கும் அமைப்பாக இருக்கும் என அனைவருக்கும் உறுதி கூறுகிறேன்.
விழா பற்றி ஒரு சிறிய பகிர்வு…
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் இந்த நிகழ்வு நடக்க நேற்று 29/12/21 மாலை இடம் கொடுத்த நிர்வாகத்திற்கு நன்றிகள்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்கள் பேசும் போது… NPNK நண்பர்கள் மன்றம் வழங்கிய 3 ம் ஆண்டு விருது விழா கடந்த ஆண்டை விட சிறப்பான ஏற்பாடுகளுடன் தகுதியான நபர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது அத்துடன் இதற்காக வழங்கப்பட்ட விருதுகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகளை தனித்துவமாக உருவாக்கிய நெல்லை லெனின் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த விருது விழாவில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் நெல்லை தென்காசி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 14 ஆளுமைகள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் எங்கள் குழு கலை இயக்குனர் அண்ணன் லெனின் அவர்கள் கையால் தயாரிக்கப்பட்ட தனித்துவமான விருதுகள் வழங்கப்பட்டு கவுரவம் செய்யப்பட்டனர்.
ஆச்சரிய அரசுத்துறை அதிகாரி விருது நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர்
திருமதி. சிவ சத்தியவள்ளி அவர்களுக்கும்
சிறந்த ஊடகவியலாளர் விருது திரு. முப்புடாதி அவர்களுக்கும்
சிறந்த விளையாட்டு வீரர் விருது தேசிய வில்வித்தை வீரர் விருது திரு.முகம்மது பரூக் அவர்களுக்கும்
சிறந்த சூழலியலாளர் விருது திரு.ரமேஷ்வரன் அவர்களுக்கும்
சிறந்த சமூக சேவை நாயகன் விருது
மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு.சரவணன் அவர்களுக்கும்
சாதனை கலைஞன் விருது ஓவிய ஆசான் திரு. பத்தமடை கணேசன்
அவர்களுக்கும்
சிறந்த அறிவியல் சிந்தனையாளர் விருது
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் திரு. சுதாகர் அவர்களுக்கும்
நம்பிக்கை நாயகன் விருது
வரலாற்று ஆர்வலர் மற்றும் ஆசிரியர் திரு.சிவகளை மாணிக்கம் அவர்களுக்கும்
இளம் சாதனையாளர் விருது செல்வி.திவ்யபாரதி
அரோரா சமூக அறக்கட்டளையின் செல்வி திவ்யபாரதி அவர்களுக்கும்
சமூக நல் மாற்றத்திற்கான குழு விருது நெல்லை அனிமல் சேவர்ஸ் குழுவினர்க்கும்
சிறந்த சூழலியல் நண் பன் விருது
கா.பக்கீர் முகம்மது லெப்பை அவர்களுக்கும்
சிறந்த தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர் விருது
திரு.N. M. மிதார் முகைதீன்
ஒருங்கிணைப்பாளர்
FOP – மக்களின் நண்பர்கள் அமைப்பு நண்பர்களுக்கும். தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பி.இளங்கோவன் அவர்களுக்கும்
வழங்கப்பட்டது.
கனவு ஆசிரியர் என்ற விருது தூத்துக்குடி மாவட்டம் அரசு பள்ளி ஆசிரியர் திரு.நெல்சன் பொன்ராஜ் அவர்களுக்கும்
வழங்கப்பட்டது.
நிறைவாய் முடிந்தது எங்க தே விருதுகள் – 2021 விழா
2022 இல் அடுத்த விழா என் 2 வது புத்தக வெளியீட்டு விழா அது பற்றிய அறிவிப்பு விரைவில்.
அன்புடன்
மு.வெ.ரா


