17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் நடுவக்குறிச்சியைச் சேர்ந்தர் மாரியப்பன் மகன் சதீஷ்குமார். இவர் கடந்த 18.08.2021 அன்று 17 வயது சிறுமியை கடத்தி காதல் திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமிபிரபா குழந்தைத் திருமணச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தார்.


