சாத்தான்குளம் அருகே பங்குத்தந்தை சகோதரரின் கார் கண்ணாடியை உடைத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கருங்கடல் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தையாக இருப்பவர் பாக்கிய ஜோசப்ராஜ். கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆலய வளாகத்தில் நின்று செல்போனில் விளையாடி கொண்டிருந்ததை, பங்குத்தந்தை கண்டித்தாராம். இதனால் அவா¢களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பங்குத்தந்தையின் சகோதரர் விளாத்திகுளத்தைச் சேர்ந்த இருதயராஜ் (45) என்பவர் புதிதாக வாங்கிய காரை அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக கொண்டு வந்துள்ளா£¢. அந்தக் காரை ஷெட்டில் நிறுத்திவிட்டு அவரது வீட்டில் தூங்கினாராம். காலையில் எழுந்து பார்த்தபோது கார் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து இருதயராஜ் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் எபனேசர் விசாரணை நடத்தி, அதே ஊரைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சார்லஸ்ராஜா(21), மோசஸ் மகன் சாத்ராக் (24 ), ரெக்ஸ் மகன் காட்வின்(20) ஆகிய 3 பேரை கைது செய்தார். விசாரணையில், ஆலய வளாகத்தில் கும்பலாக நின்று செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரத்தில் கார் கண்ணாடி உடைத்ததாக தெரியவந்துள்ளது.


