தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாங்குடி ஊரின் எல்லையில் உள்ள தரைப்பாலம் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாங்குடி வழியாக கொம்பன்குளம், வரிப்பிலான்குளம், காரியாண்டி, இளையநேறி, நெடுங்குளம், ராமநேரி உள்ளிட்ட 10 கிராமம் மக்கள் சாத்தான்குளத்திற்கு வர முடியாமலும் சாத்தான்குளத்தில் இருந்து அவர்கள் ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும் நேற்று இரவு மட்டும் சாத்தான்குளம் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக 45 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சாத்தான்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆங்காங்கே குளங்கள் நிரம்பி வருகின்றன.


