தொடர் மழையால் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கலியாவூர் சாலையில் ஓடிய வெள்ள நீரில் குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்.
தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளது.
இன்று தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து மருதூர் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மருதூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் கலியாவூர் குளத்தில் மறுகால் பாய்ந்தது. இந்த நீரானது ஊரின் வெளிப்புறத்தில் இருந்து சாலைகளில் பாய்ந்தோடி வருகிறது. இதில் கலியாவூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் டைவ் அடித்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த தண்ணீர் கூடினால் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


