தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் புனித பிரகாசியம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 தினங்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை நடந்தது. அதைத் தொடர்ந்து கொடி பவனி நடந்தது. இதில் பங்கு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊர்வலமாக வருகை தந்தனர். தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி மந்திரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடி அலங்கரிக்கப்பட்டு கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மாதாவின் பாடல்கள் பாடினர்.
அதைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு திருப்பலி நடந்தது. தினமும் காலையும் மாலையும் நடைபெறும் ஜெபமாலை பிராத்தனை நடந்தது. இரவு நற்கருணை பவனி நடந்தது. இந்த பவனியில் ஏராளமான சபை மக்கள் கலந்து கொண்டார்கள்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி 29 ஆம் தேதி நடந்தது. இதற்காக இரண்டு தேர்கள் முன் செல்ல பிரகாசியம்மாள் சப்பரம் பின்னால் அணி வகுத்து சென்றது. கோயில் வளாகத்தில் இருந்து துவங்கிய தேர் பவனி, செய்துங்கநல்லூரில் முக்கிய வீதிகள் வழியாக கடந்து , மீண்டும் ஆர். சி. கோயில் வளாகத்தினை அடைந்தது. அதன் பின் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கொடியிறக்கம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் பங்குதந்தை ஜாக்சன் அடிகளார் தலைமையில் இறை சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.


