தூத்துக்குடி மாவட்டம் மூக்குப்பீறி ஆரம்ப சுகாதார நிலையம் 97.1 புள்ளிகளுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
இதற்கான சிறந்த விருதை மத்திய சுகாதார அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா புது டில்லியில் நடந்த சிறப்பு விழாவில் மூக்குப்பீறி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் டாக்டர் சோனியா மற்றும் பணியாளர் செவிலியர் நிஷ் பானுய்ன் ஆகியோரிடம் வழங்கினர். இவர்களை மாவட்ட சுகாதார பணிகள் துறை இயக்குனர், மற்றும் மதுரம் பிரைட்டன், மூக்குப்பீறி ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம நல கமிட்டி நிர்வாகிகள் வெகுவாக பாராட்டினார்கள்.


