தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சி வரை செல்லக்கூடிய புதிய சாலை திட்டத்தினை கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2025-26 தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சி வரை செல்லக்கூடிய புதிய சாலை திட்டத்தில் பகுதி-1 புதியம்புத்தூர் முதல் வாஞ்சி மணியாச்சி வரையிலான 15.4கி.மீ சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
விழாவில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கார நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


