கழுகுமலையில் குளத்தில் மீன்பிடிக்க சென்றபோது நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் வெற்றிவேல் முருகன் (41). கட்டட தொழிலாளியான இவர் கழுகுமலையில் உள்ள பெற்றோரை பார்ப்பதற்காக சென்றாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள குறவன் குளத்திற்கு மீன்பிடிக்க சென்றாராம்.
ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் நேற்று காலை குறவன்குளத்தில் வெற்றிவேல் முருகன் தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்தாராம். இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


