கோவில்பட்டியில், பல்கலைகழக அளவில் முதல் ரேங்க் பெற்று தங்கம் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
கோவில்பட்டி எஸ்.எஸ்.டிம். கல்லூரி கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி கார்த்திகா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக அளவில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதல் ரேங்க் பெற்று கடந்த 26ம் தேதி திருநெல்வேலியில் நடந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்க பதக்கம் வழங்கி பாராட்டினார்.
தங்கப்பதக்கம் பெற்று சாதனைபடைத் மாணவியை கல்லூரி செயலாளர் கண்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டினர். இதில் கல்லூரி பொருளாளர் வி.எஸ்.எம் கண்ணன்,உறுப்பினர் அருண்,கல்லூரி முதல்வர் செல்வராஜ்.ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் செல்வலட்சுமி உள்பட கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


