தூத்துக்குடியில் தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு, புத்தாடைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார.
தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்டவர்கள் 1516 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலைகள் மற்றும் இனிப்புகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை ஆணையர் ராஜாராம், சுகாதார அலுவலர் வினோத் ராஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் வேத மாணிக்கம். மண்டலத் தலைவர் அன்னலெட்சுமி, கவுன்சிலர்கள் ரெக்ஸிலின், சுரேஷ்குமார், பொன்னப்பன், கனகராஜ், சந்திரபோஸ், கோட்டு ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


