ஆதிச்சநல்லூரில் 2004 அகழாய்வு அறிக்கை வெளியிட ஏற்பாடு செய்யப்படும் என ஆதிச்சநல்லூருக்கு ஆய்வு செய்ய வந்த கனிமொழி எம்.பி பேட்டியளித்தார்.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்ய கனிமொழி எம்.பி வருகை தந்தார். அவர் ஆதிச்சநல்லூரில் புளியங்குளம் பாண்டிய ராஜா கோயில் அருகில் உள்ள குழிகளை பார்வையிட்டார். பின்பு அங்கு அமைக்கப்பட்ட உலை போன்ற அமைப்பையும் முதுமக்கள் தாழி அமைந்த இடத்தினையும் ஆய்வு செய்தார்.
அவருக்கு ஆதிச்சநல்லூர் தொல்லியல் இயக்குனர் பாஸ்கர், தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் விளங்கி கூறினார். ஆதிச்சநல்லூர் ஆய்வு வரலாற்றில் முதல் முதலாக வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, தமிழர்களின் தொன்மையை வெளிபடுத்தும் அற்புத வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும். இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்திய புலங்கு பொருட்களான மண்பானைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட 21 வடிகால் குழாய்கள், தாயப்பொருட்கள், கூரைஓடுகள், சுடுமண் பொம்மைகள் வட்ட சில்கள், புகைப்பான்கள், கண்ணாடி மணிகள், இரும்பு கத்தி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள், சதுரங்க காய் மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்கள், கீரல்கள், குறியீடுகள் என 500க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை கண்டுபிடித்துள்ளது குறித்து கூறினார்.
பின் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள்களை கனிமொழி எம்.பி பார்வையிட்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூரில் 2004 நடந்த அகழாய்வு 16 வருடம் கழித்தும் அறிக்கை வெளிவரவில்லை, மத்திய தொல்லியல் துறைக்கு உள்பட்ட 114 ஏக்கரில் மாநில அரசை ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை. எனவே அந்த அனுமதியை பெற்று தரவேண்டும். மத்திய பட்ஜெட்டில் அறிவித்தப்படி உலத தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அதற்கான நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
கருங்குளம் பனை தொழிலாளி பால்பாண்டி பனை ஓலையால் செய்யப்பட்ட முதுமக்கள் தாழியை பரிசாக வழங்கினார். அதை ஆவலோடு பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை எம்.பி. வெங்கடேசன், மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, கருங்குளம் ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுக பெருமாள், மாவட்ட வர்த்தக அணி சுந்தர் ராஜ், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக சிவகளையில் நடந்த அகழாய்வை கனிமொழி எம்பி மற்றும் வெங்கடேசன் எம்.பி ஆகியோர் ஆய்வு செய்தார். சிவகளை தொல்லியல் இயக்குனர் பிரபாகரன், தொல்லியல் ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
ஆதிச்சநல்லூர் அருகில் உள்ள கால்வாய் விலக்கு பகுதியில் கனிமொழி எம்.பிக்கு சிறப்பான வரவேற்பு கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமையில் அளிககப்பட்டது.