பாரத ஸ்டேட் வங்கியில் காலிப் காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் (Customer Support & Sales) காலிபணியிடத்திற்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்திலுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு 35 மற்றும் போர் மற்றும் போரை ஒத்த நடவடிக்கையில் காயமுற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் போரில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுகள் மற்றும் படைப்பணியின் போது 50 சதவீத காயமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு 15 காலிப்பணியிடங்களும் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் https://bank.sbi./careers அல்லது www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் 27.09.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


