தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியில் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி மற்றும் செய்துங்கநல்லூர் இணைந்து, போதைப் பொருள் ஒழிப்பு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சகோதரர் அசாருதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாவட்ட செயலாளர் சுலைமான், மாவட்ட பொருளாளர் ரஷீத், மாவட்ட துணைச் செயலாளர்கள் இம்ரான், இமாம் பரீத் ஆகியோர் முன்னிலையில்,
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில செயலாளர் சையத் அலி அவர்கள் பேரணியை தொடங்கி வைத்தார். சிறிய மசூதி தெருவில் தொடங்கப்பட்ட இந்த பேரணி பஜார் தெரு வழியாக பேருந்து நிலையம் வந்து அடைந்தது.
பேரணியின் இறுதியில் மாநிலச் செயலாளர் சகோதரர் செய்யது அலி அவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சாரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பதை மக்களுக்கு எடுத்து வைத்தார்.
மேலும், கையெழுத்து இயக்கத்திற்கான பெரிய பேனர் வைக்கப்பட்டு அதில் இந்த விழிப்புணர்வு பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடிய மக்கள் தங்களது கையெழுத்தை ஆர்வமாக பதிவிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் போதையை பீடி சிகரெட் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் தடை செய்ய வலியுறுத்துவோம் என பேரணியில் கலந்து கொண்டவர்கள் உறுதி ஏற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்துங்கநல்லூர் கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்தனர்.


