199. தாமிரபரணியை காப்பாற்ற வழக்கு
பழமையான புராதன சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தாமிரபரணி கரையோரத்தில் உடைந்த மண்டபங்கள், விவரங்களை தாக்கல் செய்யுமாறும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தாமிரபரணியை நேசிக்கும் நண்பர்களுக்கு ஆனந்தம் தரும் செய்தியாகும்.
நான் தான் மதுரை ஐகோர்டில் தாமிரபரணியை பாதுகாக்கப்பட வேண்டும் என்று மனு செய்திருந்தேன். அந்த வழக்கின் விவரம் இதுதான்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் 6200 அடி உயரத்தில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 125 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த ஆற்றில் ஓடும் நீரானது குடிநீர், விவசாயம், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கழிவு நீரை அகற்றுவதற்கும் இந்த ஆறு பயன்படுகிறது.
தாமிரபரணி ஆற்றின் இரு கரையிலும், பழமையான மண்டபங்கள், ஏராளமாக உள்ளன. இவை அனைத்தும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டவை. இவற்றை முறையாக பாதுகாத்து அடுத்த தலைமுறையிற்கு கொண்டு செல்வது அரசின் கடமை. இவற்றில் பெரும்பாலானவை சீதிலமடைந்து கிடக்கின்றன.
தமிழ் புராணங்களின் கூற்றுப்படி, தாமிரபரணி ஆற்றங்கரையில் 144 தீர்த்த கட்டங்களுக்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது பாபநாச தீர்த்தம், தீப தீர்த்தம், சால தீர்த்தம், முகுந்த தீர்த்தம், சிங்க தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், கஜேந்திர மோட்ச தீர்த்தம், சுஜேந்திர மோட்ச தீர்த்தம், கர்ம தீர்த்தம் பைரவ தீர்த்தம், பைரவ தீர்த்தம், துர்கா தீர்த்தம், துர்வாச முனிவர் தீர்த்தம், மகேந்திர தீர்த்தம், கடனசங்கம தீர்த்தம், உள்ளிட்ட தீர்த்த கட்டங்கள் இருந்தன என்று தாமிரபரணி குறித்த புத்தகங்கள் கூறுகின்றன. இங்கு 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை ” மகா புஷ்கர” திருவிழா கொண்டாடப் படுகிறது.
எனவே தாமிரபரணி ஆற்றங் கரையில் உள்ள பழமையான மண்டபங்களையும் படித் துறைகளையும் சீரமைத்து பாதுகாக் கவும் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தேன்.
இந்த வழக்கை கடந்த 19.09.2022 அன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பழமையான புராதான சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பழமையான மண்டபங்கள் படித்துறைகள் எத்தனை உள்ளன. எங்கே எங்கே உள்ளன பராமரிப்பின்றி கிடக்கும் மண்டபங்கள், படித்துறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து மனுதாரர் தரப்பினர் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கை இரண்டு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கின் படி படித்துறைகளை நான் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு போய் பார்த்தேன். தற்போது அதன் நிலையை நீதியரசர்கள் படம் பிடித்துகாட்ட கூறியுள்ளார்கள்.
எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாளையங் கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ் தலைமையில் வரலாற்று துறை முதுகலை முதலாமாண்டு மாணவர் சுபாஷ் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுவை தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அனுப்பியிருக்கிறேன்.
மண்டபங்கள் மற்றும் படித்துறையை பொருத்து வரை அது இருக்கும் இடத்தின் பெயர். அந்த படித்துறைக்கு என்ன பெயர், அந்த படித்துறை காணப்படும் தாலூகா, அந்த படித்துறை பழுதடைந்துள்ளதா?. அல்லது மிக மோசமாக உள்ளதா? என்பது குறித்து அவர்கள் தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே மண்டபங்கள் நிலைகுறித்து தகவல்சேகரிக்க கூறியிருக்கிறேன்.
பெரும்பாலுமே படித்துறை மற்றும் மண்டபம் இருக்கும் ஊர்களான பாபநாசம¢, பழைய பாபநாசம¢, அம¢பாசமுத¢த¤ரம¢, ஆலடியூர், கல¢ல¤டைக¢குற¤ச¢ச¤, ஊர¢க¢காடு, சாட¢டப¢பத¢து, முக¢கூடல¢, அர¤யநாயக¤புரம், அத¢தாளநல¢லூர¢, த¤ருப¢புடைமருதூர¢, சக¢த¤குளம¢, சேரன¢மகாதேவ¤, கோடகநல¢லூர¢, கர¤சூழ¢ந¢த மங¢கலம¢, மேலச¢செவல், சுத¢தமல¢ல¤, கருங¢காடு, கோபாலசமுத¢த¤ரம¢, த¤ருவண¢ணாங ¢கோய¤ல¢, குன¢னத¢தூர், மேலநத¢தம¢, த¤ருநெல¢வேல¤, வண¢ணார¢பேட¢டை, மண¤மூர¢த¢த¦ஸ¢வரம¢, அருகன¢குளம¢, பாலாமடைக¤ராமம¢, ச¦வலப¢பேர¤ ஆகியவை நெல்லை மாவட்டத்தில் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் அகரம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண¢டம, ஆழ¢வார¢த¤ருநகர¤, ஏரல¢, ஆத¢தூர¢ பகுதியில் உள்ள படித்துறைகளையும் மண்டபங்களையும் தேடி இந்த குழுவினர் சென்று வருகின்றனர்.
நம் தாமிரபரணி இயக்கத்தினை சேர்ந்த நல்லபெருமாள் அய்யா, சுசுகி ஹரிபிரசாத் ஆகியோரும் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். இதையெல்லாம் ஆவணப்படுத்தி மதுரை உயர்நீதி மன்றத்தில் அறிக்கையாக கொடுக்க உள்ளோம்.
அதற்கான பணியை எங்களது வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி செய்து வருகிறார்.அவர் இதற்காக மதுரையில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் என்னை பார்க்க வந்து விட்டார்.
அவர் என்னுடைய ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை வழக்கில் வாதிட்டு வெற்றி பெற்று தந்தவர். தற்போது ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் உருவாகுகிறது, பொருநை அருங்காட்சியகம் உருவாகிறது என்றால் அதற்கு காரணம் இவர் எனது மனு மீது வாதாடியது தான். எனவே தாமிரபரணி என்றுமே டாக்டர் அழகுமணி என்னும் வைகை கரை மைந்தரை மறக்கவே மாட்டார்கள்.
இது ஒருபுறம் இருக்க தாமிரபரணியில் ஒவ்வொரு இடத்தில் கலக்கும் சாக்கடையை கண்டு நமது குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதை படமெடுத்து நீதியரசர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த களப்பணி மூலமாக தாமிரபரணியை ஆய்வு செய்து டாக்டர் ஜோசப் ராஜ் ,முதுகலை முதலமாண்டு மாணவர் சுபாஷ் மற்றும் குழுவினர் கொடுக்கும்போது , நல்லதொரு விடிவு காலம் தாமிரபரணிக்கு கிடைக்கும் என நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளோம்.
(நதி வற்றாமல் ஓடும்)


