
செய்துங்கநல்லூரில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் நடைபெற்றது. கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமை வகித்தார் , கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் புங்கன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி, மதிமுக ஒன்றியசெயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சிறு வணிகர்களை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளான திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஐஎம், இந்திய முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் , திமுக சார்பில்,மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் டாக்டர் கலீல் ரகுமான், முன்னாள் அவைத் தலைவர் பட்டன் , முன்னாள் சேர்மன் சுடலை பாண்டியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம் , தெற்கு மாவட்ட ஒன்றிய மகளிர் அணி விஜிலா , பொதுக்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சுடலைமணி , விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன், தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் பாலாமணி, கருங்குளம் தெற்கு நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் கொம்பையா, ரெங்கன், ஷேக் அப்துல்காதர், இளைஞரணி ஜிந்தா, மற்றும் மதிமுக சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுடலை, காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு இளைஞரணி தலைவர் சித்தார்த், மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மீரான், கருங்குளம் தெற்கு ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் வடிவு , திமுக கிளைக்கழக செயலாளர்கள்
சிவசுப்பிரமணியன், ஐயப்பன்,முத்து, பலவேசம், முத்துசாமி, அலி பேக் , இசக்கி, தர்மலிங்கம், முருகேசன், அருண்குமார், துரை, சாபர் சாதிக், கரீம்பாய், சீனி பாண்டியன், அபுசாலி , துரைராஜ், கலாநிதி, இசக்கி பாண்டியன், கலை மோகன், அருள்ராஜ், உட்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.