செய்துங்கநல்லூர் அருகே ஆறாம்பண்ணை கிராமத்தில் இடிந்த நிலையில் கிடக்கும் ரேஷன் கடை கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய ரேஷன் கடை கட்ட ஊர் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஆறாம்பண்ணை கிராமத்தில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்னால் இடிந்து ரேஷன் கடை இடிந்த நிலையில் காணப்பட்டது. இதனால் மக்கள் ரேஷன் கடைக்கு வர அச்சப்பட்டனர் இதனால் ரேஷன் கடையை வேறு ஒரு கட்டிடத்துக்கு மாற்றி பொருட்கள் வழங்கி கொண்டிருக்கின்றனர், இடிந்த ரேஷன் கடை கட்டிடத்தின் அருகே சிறுவர்கள் ஆங்காங்கே விளையாடிக் கொண்டி ருப்பதால் அச்சப் படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்,இந்த பழுதடைந்த கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய ரேஷன் கடை கட்டித் தரும்படி ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் என பலரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கவனத்தில் எடுத்து ரேஷன் கடையை சுற்றி விளையாடும் சிறுவர்களின் நலன் கருதி அப்புறப்படுத்திவிட்டு அபாயத்தை போக்கவும். ஊர் பொதுமக்கள் நலன் கருதி புதிய ரேஷன் கடை கட்டித் தரும்படி ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், இணைந்து வலியுறுத்தினர்.


