ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள நவதிருப்பதி கோயில்களில் புரட்டாசி
2-ம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது நவதிருப்பதி ஸ்தலங்கள். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரான் கோயில், நத்தம் ஸ்ரீ விஜயாசனப்பெருமாள் கோயில், திருப்புளியங்குடி ஸ்ரீ காய்சினிவேந்தர் பெருமாள் கோயில், பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் பெருமாள் கோயில், தென்திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் கோயில், திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோயில், இரட்டைத்திருப்பதி ஸ்ரீ அரவிந்தலோசனார் பெருமாள் கோயில், ஸ்ரீ தேவர்பிரான் பெருமாள் கோயில், ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஆதிநாதர்பெருமாள் கோயில் உள்ளிட்ட நவதிருப்பதி கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை தோறும் அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஷ்வரூபதரிசனம், திருமஞ்சனஅலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு கரோணா அச்சுறுத்தல் காரணமாக காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் விஸ்வரூப தரிசனம் திருமஞ்சன அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேர்மெல் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. சனிடைசர் மூலம் கை சுத்தம் செய்ய கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோயில்கள் காலையில் நடைதிறக்கப்பட்டு இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெய் விளக்கு ஏற்றுவதற்கு அனுமதி இல்லை. மேலும் தீர்த்தம் துளசி வழங்கவும் அனுமதி இல்லை. பக்தர்கள் அனைவரும் இடைவெளிவிட்டு சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.