தூத்துக்குடியில் தூய மரியன்னை கல்லூரியில் நடைபெற்ற மெகா வேலை வாய்ப்பு முகாமில் 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நான் முதல்வன் மாநில அளவிலான வேலை வாய்ப்புத் திட்டத்துடன் இணைந்து தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நடத்திய மெகா வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் 300க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு தேடும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை கல்லூரி செயலாளர் சி. ஷிபானா வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜெஸ்ஸி பெர்னாண்டோ, சுயநிதி பிரிவு இயங்குனர் ஜோசப்பின் ஜெயராணி, துணை முதல்வர் எஸ்.எழிலரசி ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இம்முகாமில் 380 நபர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேலும் நிபுணர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், வேலை வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் விதமாகவும் முகாம் ஒரு தளமாக அமைந்தது. இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நான் முதல்வன் வேலை வாய்ப்பு மேலாளர் தினேஷ் மற்றும் தூய மரியன்னை கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ப்ளோரா மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்.


