தூத்துக்குடி வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
திருநெல்வேலியில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகைதந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் புத்தகம் வழங்கி வரவேற்றார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


