தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி காெண்டாடப்பட உள்ளது.
இது தொடர்பாக திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம், திருக்குவளை எனும் குக்கிராமத்தில் பிறந்து தன்னுடைய 14 வயது மாணவ பருவத்திலேயே இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி, அதன்பின் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா என தலைவர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்ட களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரானாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் முத்துமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் 1957 முதல் 2016 வரை 13 தேர்தல்களில் நின்று வென்று காட்டியவர். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றி பல குடியரசு தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணை நின்ற அரசியல் ஆளுமை, இத்தனை திறமைகளும், இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர்நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அவருடைய வழியிலேயே இந்த இயக்கத்தையும், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியையும் நடத்தி வருபவர் தான் நம்முடைய கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். முத்துமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை 2023 ம் ஆண்டு ஜூன் 3 முதல் அந்த ஆண்டு முழுவதும் கொண்டாடிட வேண்டும் என்ற கழகத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ”ஊர்தோறும் கலைஞர்” என்றதலைப்பில் அனைத்து கிராமங்களிலும் கழகத்தின் இருவண்ணக்கொடிஏற்றப்பட்டது.
அதுபோல இளைஞரணி சார்பில் தொகுதி தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற தலைமைக் கழக செயல் திட்டத்தின்படி தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டது. கழக மகளிரணி சார்பில் “கலைஞர் 100” வினாடி வினா நிகழ்ச்சிதூத்துக்குடியில் நடத்தப்பட்டது. பொறியாளர் அணி சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடத்தப்பட்டது. அதுபோல தொகுதிக்கு 100 பெண்கள் வீதம் 3 தொகுதிகளிலும் 300 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி, மினி மாரத்தான் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. “மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளை அரவணைத்த கலைஞர்” எனும் தலைப்பில் அவர்களுக்கு கருத்தரங்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு உறுப்பினர் சேர்க்கை தொகுதிக்கு 50 ஆயிரம் என தலைமைக் கழகம் இலக்கு அளித்திட்ட போதும் அதை தாண்டியும் புதிய உறுப்பினர்களை சேர்த்து நமது மாவட்டம் முன்னிலை பெற்றது.
இந்தியாவில் ஜனநாயத்திற்கு நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் வட இந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கே நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிப்பார்ப்புக்குரிய தலைவராக நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் செயலாற்றியது போல, தற்போதைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கலைஞரின் வழியில் இந்திய ஜநயாகத்தை காப்பாற்றிட, மாநில உரிமைகளை மீட்டிட, மக்கள் நலம் பயக்கும் நல்லாட்சி ஒன்றியத்தில் அமைந்திட “இந்தியா” கூட்டணியை ஒருங்கிணைத்தார்.
அவரின் அறிவுறுத்தலின்படி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா ஜீன் -3 அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகங்களுக்கு உட்பட்ட அனைத்து வார்டு மற்றும் கிளைக்கழகங்கள் தோறும் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு, இனிப்புகள் வழங்கி, கழக கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்பி, கழகதத்தின் இருவண்ணக் கொடியை புதிதாக ஏற்றியும் உற்சாகமாக கொண்டாடிட வேண்டும்.
அன்றைய தினம் கழகத்தினர் தங்கள் இல்லங்களில் “கலைஞர் 100” என்ற வரியுடன் கோலமிட்டும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியும், ஏழை கொண்டாடிட வேண்டும். எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,அதுபோல ஜீன் 3 அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முதியோர் இல்லங்கள்,
ஆதரவற்றோர் இல்லங்கள், மாற்றுத்தினாளிகள் இல்லங்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட இருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வை தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


