தூத்துக்குடி மாவட்டத்தில் “ஒன் ஸ்டாப் சென்டரில் 8 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் “ஒன் ஸ்டாப் சென்டர் (One Stop Centre) செயல்பட்டு வருகிறது. அதில் பணிபுரிய வழக்குப் பணியாளர்கள் – 4, உதவியாளர் (சமையலர் மற்றும் அலுவலக உதவியாளர்) பணியிடம் – 2 மற்றும் பாதுகாவலர் பணியிடம் – 2 ஆகிய பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 10.01.2022-ற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
வழக்குப் பணியாளர் (மொத்தப் பணியிடம் 4)
தகுதி மற்றும் அனுபவம்: இளநிலை பட்டம், ஆலோசனை உளவியல் அல்லது வளர்ச்சி முகாமைத்துவம் போன்ற படிப்புகளுடன்; பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான நிறுவனத்தில் அரசு அல்லது அரசுசாரா நிறுவனத்தில் அல்லது பெண்கள் சார்ந்த முன்னுரிமைத் திட்டத்தில் அல்லது பெண்கள் ஆலோசனை மையத்தில் 1 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு பெண் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணி தொடர்பான பயணப்படி வழங்கப்படும். உள்ளுரில் வசிப்பவர்க்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். மாத சம்பளம்: ரூ.15,000/-
பாதுகாவலர் (மொத்த பணியிடம் 2)
தகுதி மற்றும் அனுபவம்: ஏதேனும் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணி தொடர்பான பயணப்படி வழங்கப்படும். உள்ளுரில் வசிப்பவர்க்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். மாத சம்பளம்:10,000/-
சமையல் மற்றும் அலுவலக உதவியாளர் (மொத்த பணியிடம் 2)
தகுதி மற்றும் அனுபவம்: அலுவலக தொடர்பான இடத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் கலை தெரிந்திருக்க வேண்டும். இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணி தொடர்பான பயணப்படி வழங்கப்படும். உள்ளுரில் வசிப்பவர்க்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். மாத சம்பளம்:6,400/- என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகம்
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கோரம்பள்ளம், தூத்துக்குடி – 628101.
தொலைபேசி எண்: 0461 2325606.