முத்தாலங்குறிச்சியில் உள்ள பழமையான கோயில் லெட்சுமி நரசிம்மர். இந்த ஆலயம் தாமிரபரணி ஆற்றங்கரையில் தனி சன்னதியில் இருப்பது இவ்வூரில் உள்ளது சிறப்பாகும். எனவே இந்த ஆலயத்தினை தென்னகத்து அகோபிலம் என குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயம் கடந்த 100 வருடங்களாக போதிய பூஜை இன்றி இருந்தது. இந்து அறநிலையத்துறையின் சார்பில் தற்போது ஒரு கால பூஜைத் திட்டத்தில் இந்த ஆலயத்தினை இணைத்து தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். மேலும் ரூபாய் 10 லட்சம் செலவில் இந்த ஆலயத்தினை புரணமைக்க இந்த அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கிடையில் லெட்சுமி நரசிம்மர் பக்த ஜனா சபா சார்பில் பல்வேறு பூஜைகளை பக்தர்கள் இந்த ஆலயத்தில நடத்தி வருகிறார்கள். பிரதோசம், நரசிம்மர் ஜெயந்தி, சுவாதி மற்றும் மகாசிவராத்திரி போன்ற பூஜைகள் மிகச் சிறப்பாக பக்தர்கள் ஏற்பாட்டில் நடந்து வருகிறது. கிராம கோயில்கள் திட்டத்தின் கீழ் தற்போது சுற்றப்புறச்சுவர் பாதி கட்டப்பட்டுள்ளது. மீதி கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்த ஆண்டு முதல் மார்கழி சிறப்பு பூஜை பக்தர்களால் தினமும் நடத்த திட்டமிட்டனர். இதற்கான முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் பக்த ஜனா சபா தலைவர் சோமசுந்தரம், அறங்காவலர்கள் முத்தாலங்குறிச்சி காராசு, சேஷப்பன், வள்ளிநாதன் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதன் படி மார்கழி 1 ந்தேதி முதல் பூஜை துவங்கியது. 100 ஆண்டுகளுக்கு பிறகு மார்கழி தினசரி பூஜை நடைபெறுவதாக பக்தர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். இதற்கு தினமும் உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் உதவி வருகின்றனர். இதற்காக தினமும் பக்தர்கள் ஆர்வத்துடன் பூஜையில் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த பூஜையில் விரைவில் திருப்பணி நடந்து இந்த பழமையான ஆலயத்துக்கு கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என பகவானிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி & பூஜை செய்ய வேண்டுவோர் 9952714886 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் & அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


