பொருநை அருங்காட்சியகம் உலக அரங்கில் பெயர் பெற்று வருகிறது. இந்த வேளையில் பல்வேறு ஊடகங்கள் பொருநை பற்றிய செய்திகளை மிகப்பிரமாண்டமாக வெளியிட்டு வருகின்றன. நீயூஸ் 18 இதற்கான செய்தியை விரிவாக அரை மணிநேரம் வெளியிட்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு அய்யா, தொல்லியல் இயக்குனர் சிவானந்தம் அய்யா, சிவகளை மாணிக்கத்துடன் எனது பேட்டியும் இடம் பெற்றுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்த நியூஸ் 18 நிறுவனத்துக்கும் ஆசிரியர் குழுவிற்கும் , தொகுப்பாளர் வெற்றி அவர்களுக்கும், அறிமுகம் செய்த நெல்லை மண்டல செய்தியாளர் சிவமணி அவர்களுக்கும் நன்றி. வீடியோ பாருங்க. நிறைய பார்வையாளர்களை பொருநை அருங்காட்சியம் பார்வையிட ஆவண செய்யுங்கள். இதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி வரும் மாவட்ட ஆட்சியர் மரு.சுகுமார் அய்யா உள்பட போக்குவரத்து நிர்வாகத்துக்கு மிக்க நன்றி- அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


