தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாளை (மே 29) தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நாளை (மே 29) வியாழக்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்- திருத்தங்கள் குறித்து உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.


