தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக மரக்கிளை முறிந்து விழுந்து சாலையோரம் நிறுத்தியிருந்த கார் சேதம் ஆனது.
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்கிறது. இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதில், தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி 60 அடி ரோட்டில் இருந்த வேப்பம்பரம் மரம் முறிந்து விழுந்தது.
அப்போது சாலையோரத்தில நிறுத்தியிருந்த கார் மீது மரக்கிளை விழுந்ததால் காரின் மேல் பகுதி லேசான சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


