இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது தமிழக விடுதலைப் போராட்டத்தில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் வடஇந்தியத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த பல நிகழ்வுகள் அரங்கேறின ஆஸ்துரை சுடப்படல், கோரல் மில் போராட்டம், லோன் துரை கொல்லப் படல், சுதேசி நாவாயச் சங்கம் போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. இந்தப் போராட்டங்களுள் தொழிலாளர் நலனும் விடுதலை உணர்வும் கலந்த
போராட்டம் கோரல்மில்’ போராட்டம் என்றழைக்கப்படும் A – FHARVEY நூற்பாலைப்போராட்டம். ஒட்டப்பிடார வட்டத்தில் ஏழைகளின் நிதிக்காக வாதிட்ட வ.உசி. ஆங்கிலேய அதிகாரிகள் பலரின் கோபத்துக்கு ஆளாக நேரிட்டது. தந்தையின் கட்டளையின் படி தூத்துக்குடிக்குக் குடிபெயர்ந்து இங்குள்ள நீதிமன்றத்தில் வ.உசி வழக்காடி வந்தார். அந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஆங்கிலேய நீதிபதி
வாவிஸ் துரை, வ.உ.சி.யின் வாதத் திறமையைக் கண்டு வியந்தார்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் ஆங்கிலேயர்க்குச் சொந்தமான நூற்பாலை ஒன்று இருந்தது. இந்தச் சாலை முழுவதுமே தூற்பாலை தொடர்பான அலுவலகங்களே அந்நாளில் இயங்கி வத்தன. இந்த நூற்பாலையை அன்றைய நாளில் ‘கோரவ்மில் என்று அழைத்தனர் ஆங்கிலேயருக்குச் சொந்தமான A- F Hinvey நூற்பாலையில் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் வேலை செய்தனர். இத்தொழிற்சாலை நிர்வாகம் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொழிலாளர்களை வேலை வாங்கியது உணவு இடைவேளை நேரம் என்பதைக் கூட கொடுக்க மறுத்ததோடு, வார விடுமுறை குறைந்த கூவி சிறார்களை வேலைக்கு வைத்தல் என்று பல மனித உரிமை மீறல்களைச் செய்து வந்தது.
இந்த ஆலையின் உரிமை பறிப்புக்கு எதிராகத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ஊதிய உயர்வு வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வஉசி தலைமையேற்று 2 21978 இல் போராட்டததைத் தொடங்கினார். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்கள் கதவடைப்பு செய்யப் போவதாக மிரட்டினர். போராட்டம் சிலநாட்கள் நீடித்தது. வஉசி தலைமையேற்று நடத்திய இப்போராட்டத்திற்கு அன்று இவ்வூரில் பெரும்பான்மையாக வாழ்ந்த மீனவர்கள் மட்டுமல்லாது அணைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு நல்கியதோடு பொருளாதார உதவிகளையும் வழங்கினர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பஞ்சாலை தொழிவாளர்களுக்கு வஉசியும் சுப்பிரமணியசிவாவும் கஞ்சி ஊத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் பஞ்சாலை நிர்வாகம் சில கோரிக்கைகளை ஏற்க முன் வந்தது. இதனால் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர்.
வஉசி சுதேசி இயக்கச் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார், 1908 மார்ச் 9 இல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைதண்டனை முடித்து வெளியே வந்த பின் விடுதலையைத் தூத்துக்குடியில் கொண்டாட ஆங்கிலேய அரசு தடை விதித்தது. நீதிபதி வால்லஸ் வஉசி க்குப் பலகட்டுப்பாடுகளை விதித்தார் வஉசியும் சப்பிரமணிய சிவாவைவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஞ்ச், உதவி ஆட்சியர் ஆஸ்துரை ஆகியோர் அழைத்துப் பேசி போராட்டத்திற்குத் தடை விதித்தனர். இதனை மீறி நெல்லையில் விபின் சந்திரபாலின் விடுதலை நாளை ஊர்வலம், தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுக்கூட்டம் என மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். இதனால் தேச து ரோகவழக்கில் 12.03. 1908 இல் வஉசி சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்தனர்; மூவர் காயமுற்றனர்.
மூவரையும் விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடியில் கடையடைப்பும் போராட்டமும் நடைபெற்றன. கோரல் மில் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை ஓடுக்க வெளியூர்களில் இருந்து படைகள் கொண்டு வரப்பட்டன. வெளியூரிலிருந்து வந்த படையினருக்குக் கடைகள் அடைக்கப்பட்டதால் உணவு, தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வெளியூர் படைகளின் வரவை ஆதரித்த ரெங்கசாமி ஐயங்காருக்கு முடி திருத்தவும் அவரது துணிகளைச் சலவை செய்யவும் விளிம்பு நிலை மக்கள் மறுத்தனர். இதன் மூலம் வ.உசி.யின் போராட்டத்தில் ஓடுக்கப்பட்ட மக்களின் பங்களிப்பை அறிய முடியும்.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிபதி வாலஸ் முன் நிறுத்தப்பட்டனர் நீதிபதி வாலஸ் துரை அவ்வழ்க்கை முறைப்படி விசாரிக்கவில்லை என்று சொல்லி வ.உ.சி வழக்காட மறுத்தார். இதனால் இவ்வழக்கினை நீதிபதி பின்ஹேயின் விசாரித்தார். இவ்வழக்கில் ஐயங்கார் விடுவிக்கப்பட்டார் சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தேசத்துரோகமென வ.உசிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் நாடு கடத்தவும் தீரப்பளிக்கப்பட்டது. பல் முனை சட்டப் போராட்டத்தால் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வ.உசி. விடுதலையானார்.
சிறை தண்டனை பெற்றவர்கள் வழக்குரைஞர் பணியை மீண்டும் செய்ய ஆங்கிலேய அரசின் அனுமதியைப் பெற வேண்டும். சிறையிலிருந்து வெளி வந்த வ.உசி. மீண்டும் வழக்காட விரும்பவில்லை. வறுமை அவரை வாட்டியதால் வழக்காட அனுமதி வேண்டி விண்ணப்பித்தார் அப்போது சென்னையில் நீதிபதியாக இருந்த நீதிபதி வாலஸ்துரை வ.உசிக்கு அனுமதியளித்தார். தன்னுடைய போராட்டத்திற்கு ஆதரவளித்தோருக்கு நன்றி செலுத்தும் விதமாகத் தன் பிள்ளைகளுக்கு வாலஸ்துரை அவர்களின் பெயரைச் சூட்டி வ.உ.சி. நன்றி பாராட்டி வந்தார். அதன் படி தன் மகன் ஒருவர்க்கு வால்ஸ்வரன் என்று பெயர். கோரல் மில் போராட்டம் தூத்துக்குடி மக்கள் அனைவரையும் பங்கு பெறச் செய்த போராட்டம் மட்டுமன்றி தூத்துக்குடியில் நிகழ்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புடன் கலந்த தொழிலாளர் போராட்டம் என்றால் அது மிகையாகாது
தொடர்பானவை
October 4, 2024