சென்னையில் தொடங்கியுள்ள புத்தக கண்காட்சியில் கூடுதல் சிறப்பாக பொருநை ஆற்றங்கரை நாகரிகம் குறித்த தொல்பொருள் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.தமிழர்களின் வரலாறு 3200 ஆண்டுகளுக்கும் தொன்மையானது என பறைசாற்றும் சான்றுகள் அங்கு விழ்ச்சிருக்கின்றன.சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சிஏ மைதானத்தில் 45 புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பல்வேறு தலைப்புகளில் அறிவுச் சுரங்கமாக புத்தகங்கள் ஒருபுறம் அணிவகுக்கின்றன. பொருநை ஆற்றங்கரை நாகரிகம் குறித்த தொல்பொருள் அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.பொருநை நதியின் கரையில் ஆதிச்சநல்லூர்,சிவகளை,கொற்கை ஆகிய இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு செய்தபோது கிடைத்த பொருட்கள் காட்சிககு வைக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் அகழாய்வு நடைபெற்ற கொற்கையில் கிடைத்த 824 பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
கொற்கை அகழாய்வு இயககுநர்:தங்கத்துரை கூறுவன
சங்க காலத்தில் வந்து சங்கை அறுத்துதிக்கிறார்கள்.அதிலிருந்து சில பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது .வெளிநாட்டிலிருந்து தொடர்பு இருந்ததற்கான சான்றுகளாக வெளிநாட்டுப் பானை ஓடுகள் கிடைத்துள்ளது.அதை வைத்து மாதிரியாகவும்,அது மட்டுமல்லாமல் முழு தொல்பொருளும் இங்கு காட்சி படுத்துதப்பட்டுள்ளது.வெளிநாட்டு நாணயங்கள் இங்கு கிடைக்கப்பட்டடிருக்கு, அதையும் காட்சிப்படுத்திருக்கிறோம்.ஒட்டுமொத்தமாக இந்த கொற்கை அகழாய்வில் வெளிநாட்டோடு தொடர்புடைய பொருட்களையும் காட்சிப்படுத்துகிறோம்.
ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கற்காலத்தை சேர்ந்தவை என்று உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அங்கு 27 முதுமக்கள்தாழிகளில் கிடைத்த பொருட்கள் உள்ளிட்ட வரலாற்று ஆதாரங்கள் பொருநை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயககுநர்:பஸ்கர் கூறுவன
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற அகழாய்வு மூலமாக இரும்பு காலத்துக்கு முன்னால் இருந்த கற்காலத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்த வாழ்விடப் பகுதியும் அது மட்டுமல்லாமல் இரும்பு காலம்,சங்க காலம் என்று அறியப்படுகின்ற வரலாற்றுக்கு
முன்தைய காலக கட்டத்தை சார்ந்த வரலாற்று ஸ்தடையங்களும் அகழாய்வுகளும் கிடைக்கப்பட்டுள்ளன.
சிவகளையில் கிடைத்த 3200 ஆண்டுகள் பழைமையான தொன்மைகளும் பொருநை கண்காட்சியை அலங்கரிக்கின்றன.அங்கு கிடைத்த நெல்மணிகளின் மூலம் தமிழர்களின் தொன்மை கண்டறியப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகளை அகழாய்வு இயககுநர்:பிரபாகரன் கூறுவன
முதுமக்கள் தாழிகள் கிடைத்த இடத்தை சுற்றி மக்கள் பயன்படுத்திய நாணயங்கள்,சுடுமண் பொம்மைகள் மற்றும் வட்ட ஜீல்லுகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.3200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் விவசாயமும் செய்துள்ளாகள் என்பதையும் கண்டறிப்பட்டுள்ளது.இனி இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழகத்திலிருந்து தான் தொடங்கியது என்பதற்கான சாட்சி இந்த கண்காட்சி